பிலிப்பீன்சில் புயல்; ஏழு பேர் மரணம்

பிலிப்பீன்சில் புயல்; ஏழு பேர் மரணம்

1 mins read
08667d23-9653-4e88-802b-cfe4cc70466c
வெள்ளம் ஏற்பட்ட இடங்களிலிருந்து சிறுவர்களை வெளியேற்றிய மீட்புப் பணியாளர்கள். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சைக் கடந்த வாரயிறுதியில் ‘எவினியார்’ புயல் உலுக்கியதில் குறைந்தது ஏழு பேர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேடுதல், மீட்புப் பணிகள் தொடரும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மே 28ல் தெரிவித்தார்.

பலத்த காற்று, கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தலைநகர் மணிலாவுக்குத் தெற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் விமான நிலையங்களும் துறைமுகங்களும் மூடப்பட்டன.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மணிக்கு கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் வேகத்தில், ஜப்பானின் கிழக்குக் கடலோரப் பகுதியை நோக்கி புயல் விரைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்