வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கில் அவர் குற்றவாளி என வெள்ளிக்கிழமை (மே 30) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ள டிரம்ப்பின் ஆதரவாளர்கள், இணையத்தளங்களின் மூலம் ஆர்ப்பாட்டங்களுக்கும் கலவரங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சிலர், நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தவும், நீதிபதி ஜஸ்டிஸ் ஜுவான் மெர்ச்சனைப் படுகொலை செய்யவும், உள்நாட்டுப் போர், ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபட டிரம்ப் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி வருகின்றனர்.
அதிபர் பதவியில் இருந்த ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்பதால் அவருடைய ஆதரவாளர்கள் பலர் இணையத்தில் வன்மையான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
டிரம்ப்புக்கு ஆதரவாக ‘கேட்வே பண்டிட்’, பேட்ரியட்ஸ்.வின், ‘டுரூத் சோசியல்’ ஆகிய மூன்று தளங்களிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

