தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான் பொருள்களுக்கான வரிச்சலுகைகளை ரத்து செய்கிறது சீனா

1 mins read
49099e2d-772f-4ff6-9a37-8dda63f0bf24
தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்று சீனா கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள்களுக்கு சீனா வரிச் சலுகைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

134 தைவான் பொருள்களுக்கு வரிச்சலுகைகள் இல்லை என்றும் அடுத்த மாதம் முதல் இந்நடவடிக்கை அமலுக்கு வரும் என்றும் சீனா கூறியுள்ளது.

தைவான், வரிச்சலுகைக்கு ஏற்ப பதில் சலுகைகளை அறிவிக்கவில்லை என்று சீனா அதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளது.

தைவானுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் 134 பொருள்களுக்கு சீனா வரிச் சலுகை அளித்து வந்தது.

கடந்த 2010ஆம் ஆண்டில் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளியல் ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் (இசிஎஃப்ஏ) கையெழுத்தானது.

அதன்படி தைவான் எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.

“சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்குth தடை மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க தைவான் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது,” என்று சீனாவின் நிதி அமைச்சு குறிப்பிட்டது.

தைவான் பொருள்களுக்கான வரிச்சலுகை நிறுத்தி வைப்பு ஜூன் 15ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இது பொருந்தும் என்று சீன நிதியமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்