அயுத்தாயா (தாய்லாந்து): தாய்லாந்தில் பாங் ஜாம்ஜுரி என்ற பெயரைக் கொண்ட 36 வயது யானை சில நிமிட இடைவெளியில் ஆண், பெண் குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 7) தாய்லாந்தின் அயுத்தாயா மாநிலத்தில் பிறந்த இக்குட்டிகள் உலகளவில் முதன் முறையாகப் பிறந்துள்ள யானை இரட்டைப் பிறவிக் குட்டிகள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு ஆண் குட்டி முதலில் பிறந்தது என்றும் அதற்கு 18 நிமிடங்கள் கழித்து பெண் குட்டி பிறந்ததென்றும் அயுத்தாயாவில் உள்ள யானைப் பூங்கா ஒன்றின் அதிகாரி சனிக்கிழமையன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
ஆண் குட்டியின் உடல் எடை 80 கிலோகிராம் என்றும் பெண் குட்டியின் எடை 60 கிலோகிராம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

