ரஷ்யப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது

1 mins read
4dfc83f2-84b0-4061-8f47-655ad287ec8b
சுகோய் எஸ்யு-34 ரக போர் விமானம். - படம்: இணையம்

மாஸ்கோ: ரஷ்யாவுக்குச் சொந்தமான சுகோய் எஸ்யு-34 ரக போர் விமானம் கோகசஸ் மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்தோர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவலை ரஷ்யத் தற்காப்பு அமைச்சு வெளியிடவில்லை.

இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் அதன் விளைவாக தரையில் பொருட்சேதம் ஏற்படவில்லை என்றும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்