கெய்ரோ: செங்கடலில் சென்று கொண்டிருந்த கிரேக்க நாட்டவரின் சரக்கு கப்பல் மீது ஜூன் 12ஆம் தேதி ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
தாக்கப்பட்ட கப்பலில் சிக்கியிருந்த மாலுமிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர்.
இருப்பினும் ஒரு மாலுமியைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பல் ஏமனின் ஹோடெய்டா துறைமுகம் அருகே இருந்தபோது தாக்குதல் நடந்தது. தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பால் கப்பலில் நீர்க்கசிவு ஏற்பட்டது. இயந்திரங்கள் இருந்த அறைகள் நீரில் மூழ்கின. அதனால் கப்பல் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கப்பல் மீது நடந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போருக்கு எதிராக இதை செய்துவருவதாக அது கூறுகிறது.