நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம்முடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதைத் தெரிவிக்காமல் இருக்க ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்குப் பணம் தந்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதை செப்டம்பர் மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக நியூயார்க் நகர நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். தம்மீது வழக்கு தொடராமல் இருப்பதற்கு வாதிட திரு டிரம்ப் வாய்ப்பு கேட்டிருப்பதையடுத்து நீதிபதி இவ்வாறு அறிவித்துள்ளார்.
தீர்ப்பு இம்மாதம் 11ஆம் தேதியன்று அளிக்கப்படும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான்கே நாள்களுக்குப் பிறகு ஜூலை 15ஆம் தேதியன்று திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு மில்வாவ்க்கி நகரில் தொடங்கும்.