தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனமழையால் தென்கொரியாவில் வெள்ளம், நிலச்சரிவு

1 mins read
83dfdcc4-b111-4b8f-80bd-5f8b2d335223
கனமழை காரணமாக தென்கொரியாவின் மத்திய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடியிருப்பாளர் ஒருவரை மீட்புப் படையினர் மீட்டனர். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் மத்திய பகுதியில் ஜூலை 7ஆம் தேதியிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஜூலை 10ஆம் தேதியன்று அந்நாட்டின் தேசிய ரயில் நிறுவனம் சில ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.

குன்சான் நகரில் ஜூலை 10ஆம் தேதி காலை, ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 100 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தென்கொரிய வானிலை மையம் தெரிவித்தது.

தென்கொரியாவின் மத்திய பகுதியில் உள்ள பல இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் அதில் ஒருவர் மாண்டதாகவும் தென்கொரியாவின் உள்துறை அமைச்சு கூறியது.

பல வீடுகள், பொதுச் சொத்துகள், சாலைகள், உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்கொரியாவின் அதிவேக ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டபோதிலும் சில பகுதிகளில் அவற்றின் வேகம் குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்