பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்

பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்

1 mins read
376ccf75-ea9f-4006-97ca-0b7711fbb3d8
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7ஆகப் பதிவாகியிருப்பதாகப் புவிசார் அறிவியலுக்கான ஜெர்மானிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - படம்: இணையம்

மணிலா: பிலிப்பீன்சின் மிண்டானாவ் தீவில் ஜூலை 11ஆம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7ஆகப் பதிவாகியிருப்பதாகப் புவிசார் அறிவியலுக்கான ஜெர்மானிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடுகடலில், பூமிக்கு 630 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அது கூறியது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருள்சேதம் எதிர்பார்க்கப்படவில்லை என்றபோதிலும் தொடர்ந்து பல நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்