டிரம்ப் மீது தாக்குதல்: சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்கள்

1 mins read
1ebbd463-4ba7-41ab-8032-3d9328a9feff
துப்பாக்கிக்சூடு நிகழ்ந்தபோது திரு டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

பட்லர் (அமெரிக்கா): முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டபோது துப்பாக்கிச்சூட்டில் காயமுற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல பொய்த் தகவல்கள் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான திரு டிரம்ப் ஈடுபட்ட பிரசாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த அவரை எதிர்த்துப் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்தார் என்று ஆதாரமின்றி சில பதிவுகள் சமூக ஊடகங்களில் இடம்பெற்றன. அச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று வேறு சிலர் ஆதாரமின்றி பதிவிட்டனர். இன்னும் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் தவறாக அடையாளம் காட்டிப் பதிவிட்டனர்.

தற்போது பதவியில் இருக்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிலரும் இதுபோன்ற பொய்த்தகவல்களைப் பரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அதுகுறித்த தகவல்கள் எப்போதும் உடனே தெளிவாகத் தெரியாது. சட்ட ஒழுங்கு, உளவுத் துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை தொடர்வதாகத் தெரிவித்தனர்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வது குறித்து விழிப்புடன் செயல்படுமாறு வல்லுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்