மில்வாக்கி: அண்மையில் பென்ஸ்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல ஆடவர் ஒருவர் முயன்றார்.
இதில் டிரம்ப் உயிர் தப்பினார்.
அவரது வலது காதில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கியால் சுடப்பட்டும் துணிவுடன் எழுந்து அவர் முழக்கமிட்டார்.
இதை அவரது ஆதரவாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதியன்று விஸ்கோன்சின் மாவட்டத்தின் மில்வாக்கி நகரில் நடைபெறும் குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் டிரம்ப் பேச இருக்கிறார்.
அவரை நேரில் கண்டு ஆதரவு தெரிவிக்க மிச்சிகன் ஏரிக் கரையில் ஏறத்தாழ 50,000 பேர் திரண்டனர்.
தமது துணை அதிபர் வேட்பாளரை டிரம்ப் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று பேசப்படுகிறது.

