தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்: ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்

1 mins read
8c3706aa-86eb-4b49-809b-e07d68994d6b
டோனல்ட் டிரம்ப். - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் தாம் பேசியதாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் ஜூலை 19ஆம் தேதியன்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக டிரம்ப் உறுதி அளித்தார்.

டிரம்ப்புடன் பேசியது தொடர்பாக அதிபர் ஸெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவ ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஆனால், கடந்த 28 மாதங்களாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் அதிபர் பதவி ஏற்பதற்கு முன்பே ரஷ்யா- உக்ரேன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாம் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரேன் போர் நடந்திருக்காது என்றார் அவர்.

உலகில் அமைதியை நிலைநாட்டப்போவதாகவும் பல உயிர்களைப் பறித்த போரை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகவும் டிரம்ப் தமது Truth Social தளத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்