மலாக்காவில் சிறப்பாக நடைபெற்ற மாசி மகத் திருவிழா

மலாக்காவில் சிறப்பாக நடைபெற்ற மாசி மகத் திருவிழா

1 mins read
46012f58-6226-4662-bbd7-6b18e7a1047f
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை 7 மணிக்கு ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதம், நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்று மாலை 6.30 மணியளவில் சன்னாசிமலையை வந்தடைந்தது.  - படம்: மக்கள் ஓசை

மலாக்கா: மாசி மகத் திருவிழா சிறப்பாக நடைபெறும் மலாக்காவின் அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் கோவிலில் இவ்வாண்டு மார்ச் 1, 2 ஆகிய இரு தினங்களில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் உள்ளூர், வெளிநாட்டுப் பக்தர்கள் திரளும் இவ்விழாவில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு மயில் காவடிகளும் இடும்பன் காவடிகளும் கணிசமாக அதிகரித்திருந்தன. “இவ்வாண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று ஆலயத்தின் டாக்டர் T.R. ராமு கூறினார்.

முருகப் பெருமான் லிங்க சொரூபமாக அருள்பாலிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு.

மாசி மகத் திருவிழா மலாக்கா தமிழர் சமூகத்தின் ஆன்மிக ஒற்றுமை, பக்தி பாரம்பரியம், தலைமுறைகள் கடந்து தொடரும் சமய நம்பிக்கையின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகறியச் செய்ததாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்