தாய்லாந்து மாணவிகள் விருப்பமான பாணியில் உள்ள தலைமுடியுடன் இனி பள்ளிக்குச் செல்லலாம்.
தாய்லாந்துப் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்ட கல்வியமைச்சின் நீண்டகால நடைமுறையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
மாணவர்கள் முடியைக் கட்டையாக வெட்டியிருக்கவேண்டும்; மாணவிகள் காது வரை சடை பின்னியிருக்கவேண்டும். இதுதான் 50 ஆண்டுகளாக தாய்லாந்துப் பள்ளிகளில் இருந்த வழக்கம்.
1975ஆம் ஆண்டு ராணுவத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அந்த நடைமுறை தனிநபர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது என்ற நீதிமன்றம், தற்போதைய சமூக வழக்கத்துக்கும் அது பொருந்தாத ஒன்று என குறிப்பிட்டது.
ஒருசில பள்ளிகளில் தலைமுடிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஆனால் வேறு சில பள்ளிகளில் விதிமுறையைப் பின்பற்றாத மாணவிகளின் முடிகள் வெட்டப்படுகின்றன.
தலைமுடிக்கான விதிமுறையை எதிர்த்து 2020ஆம் ஆண்டு 23 அரசாங்கப் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
அதையடுத்து எப்படிப் பட்ட பாணியில் உள்ள தலைமுடியுடன் மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்பது அவர்களின் சொந்த முடிவு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.