தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவில் கோடைக்கால வெப்பம்: புதிய உச்சத்தைத் தொட்ட மின்சார விநியோகம்

1 mins read
db678965-b36e-46c5-9fe8-df58650ab595
சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மின்சாரத் தேவை கூடியது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவில் பல நாள்கள் நீடித்த கடுமையான வெப்பத்தால் மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. புதன்கிழமை (ஜூலை 16) அன்று 1.5 பில்லியன் கிலோவாட்டுக்கும் அதிகமான் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக எரிசக்தி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை ஒருசில வட்டாரங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசைத் தொடும் என்று முன்னுரைக்கப்பட்டது.

வெப்பத்தையும் வறட்சியான வானிலையையும் உண்டாக்கும் வெப்பமண்டல உயர் அழுத்தம், வடமேற்கு, தென்மேற்கு சீனாவில் உள்ள 8 வானிலை நிலையங்களின் வெப்பநிலை கடந்த இரண்டு நாள்களில் புதிய உச்சத்தை எட்டியது.

“மின்சாரக் கட்டமைப்பு இதுவரை தாக்குப்பிடித்துவருகிறது,” என்றார் மூத்த எரிசக்தி, பருவநிலை மாற்ற நிபுணர் சிம் லீ.

ஆனால் கோடைக்காலம் தொடரும்போதுதான் உண்மையான சோதனை இருக்கிறது என்ற அவர், மின்சாரத்தைக் கட்டுப்பாட்டுடன் விநியோகம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்.

ஜூன் மாதம் அதிகரித்த மின்சார உற்பத்தியில் பாதி சூரியசக்தியின் மூலம் வந்தது.

நாட்டின் மின்சார உற்பத்தி இம்மாதம் மூன்றாவது முறையாகப் புதிய உச்சத்தைத் தொட்டதாகச் சீனாவின் தேசிய எரிசக்தி நிர்வாகம் குறிப்பிட்டது.

கடந்த மூவாண்டு உச்சத்தைவிட அது 55 மில்லியன் கிலோவாட் அதிகம்.

சீனாவில் இவ்வாண்டின் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து மாநிலங்களில் பதிவான வெப்பநிலை 36 முறை உச்சத்தைத் தொட்டது.

குறிப்புச் சொற்கள்