தமிழகத்தைச் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் காலம்

தமிழகத்தைச் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் காலம்

1 mins read
சென்னை உட்பட, பல வட்டாரங்கள் வெப்பத்தால் பாதிப்படைந்தன
aec83d9a-7845-4664-bd42-a76a4be1f356
கத்திரி வெயிலைத் தாங்கமுடியாது, முகங்களை மூடியபடி செல்லும் தமிழ்நாட்டு மக்கள். - படம்: ஒன்இந்தியா

சென்னை: அக்னி நட்சத்திரம் என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் வெயில் காலம் தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (மே 28) நிறைவடைந்தாலும் வெப்பம் தொடர்ந்து வாட்டி வதைக்கிறது.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் இந்த கத்திரி வெயில் பருவத்தில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உட்பட, பல வட்டாரங்கள் வெப்பத்தில் வாடி வெந்தன. கடந்த சில நாள்களாக பல பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசையும் கடந்து பதிவு செய்யப்பட்டது.

பகல் நேரங்களில் வெளியில் நடமாடும் மக்கள், தாங்கமுடியாத கடும் வெப்பத்தால் பாதிப்படைந்தனர்.

வழக்கமாக 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும் வெப்பநிலை இவ்வாண்டு 43 டிகிரி செல்சியஸ் வரை எட்டியதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

வேலைக்குச் செல்வோருடன், வெயிலின் தாக்கம் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் அவதிக்குள்ளாக்கியது.

பெய்யாத தென்மேற்குப் பருவமழை

செவ்வாய்க்கிழமை (மே 26) பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை பெய்யாததால் வெப்பம் தணியும் வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த மழை இனி ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்