தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒற்றர்கள் எனச் சந்தேகம்; பிலிப்பீன்சில் எண்மர் கைது

1 mins read
3544f1ed-2266-42fb-ab21-a12fe6a26176
தென்சீனக் கடலில் உள்ள முக்கியக் கப்பல் பாதைகளை மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடிய கிராண்டே தீவில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

மணிலா: ஒற்றர்கள் எனச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் ஆறு பேர் வெளிநாட்டினர், இருவர் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள்.

தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நெருக்கடிநிலை மோசமடைந்து வரும் வேளையில் ஒற்றர்களைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கையைப் பிலிப்பீன்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த எட்டுப் பேரும் புதன்கிழமை (மார்ச் 19) பிடிபட்டனர்.

தென்சீனக் கடலில் உள்ள முக்கிய கப்பல் பாதைகளை மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடிய கிராண்டே தீவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனியார் நிறுவனங்கள் போர்வையில் கிராண்டே தீவை சில வெளிநாட்டினர் தவறாகப் பயன்படுத்துவதாகப் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறினர்.

அவர்கள் பிலிப்பீன்சை வேவு பார்ப்பதாகவும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இணையம் வழி குற்றங்களைப் புரிந்ததற்காக சீன நாட்டவர் ஒருவரைப் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

பிலிப்பீன்ஸ் ராணுவம், கடலோரக் காவல் படை ஆகியவற்றை உளவு பார்த்த குற்றத்துக்காகக் கடந்த மாதங்களில் சீன நாட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறினார்.

இது பிலிப்பீன்சின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்