தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்புச் செலவின இலக்கை உயர்த்திய தைவான்

1 mins read
355931c2-8023-4ed4-81d2-7998ab0e8d76
ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி தைவானை அமெரிக்கா அறிவுறுத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: 2030ஆம் ஆண்டுக்குள் தற்காப்புத் துறைக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டை எட்டும் என நம்புவதாகத் தைவான் அதிபர் லாய் சிங்-டே ஆகஸ்ட் 22ஆம் தேதி கூறினார்.

ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி தைவானை அமெரிக்கா அறிவுறுத்தியது.

அதனையடுத்து, அந்நாடு து ராணுவ செலவின இலக்கை உயர்த்தியது.

2026ஆம் ஆண்டின் தற்காப்புத் துறைக்கான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.32 விழுக்காட்டை எட்டும் என ஆகஸ்ட் 21ஆம் தேதி தைவான் அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களாட்சி நடக்கும் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகச் சீனா கருதுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ராணுவ, அரசியல் ரீதியில் தைவானுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அந்நாட்டின்மீது தனக்கு இருக்கும் உரிமையைச் சீனா உறுதிப்படுத்த முற்பட்டது.

அவை அனைத்தையும் தைவான் மறுத்தது.

குறிப்புச் சொற்கள்