தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான் மீது பறந்த சீன பலூன்

1 mins read
b33b0413-6535-42f7-b6ac-f92e2c75a2fe
தைவான் மீது பலூன் பறந்த விவகாரம் குறித்து சீனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானின் வடபகுதிக் கடற்பரப்பின் மீது சீன பலூன்கள் பறந்ததாக தைவான் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (நவம்பர் 25) கூறியது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) மாலை 6.21 மணிக்கு தைவானின் கீலுங் துறைமுகத்தின் வடக்கே 111 கிலோமீட்டர் தொலைவில் பலூன் பறந்ததாக தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

ஏப்ரலுக்குப் பிறகு தற்போது அதுபோன்ற சம்பவம் தைவானில் நிகழ்ந்துள்ளது. பலூனைப் பறக்கவிட்டு தனக்குத் தொல்லை தருவதாக தைவான் கூறுகிறது.

தைவான் மீது ஆதிக்கம் செலுத்த, வெளிப்படையாகப் போர் தொடுக்காமல் இதுபோன்ற பல்வேறு தந்திரங்களை சீனா கையாண்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

தைவான் தனது அரசுரிமைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா தொடர்ந்து கூறிவரும் வேளையில், அதுகுறித்து தைவான் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என தைவான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பலூன் பறந்த சம்பவம் குறித்து சீன தற்காப்பு அமைச்சு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர், சீனாவின் பலூன்கள் பறந்தது பற்றி தைவான் புாகர் தெரிவித்தபோது, அந்த பலூன்கள் வானிலை ஆராய்ச்சி தொடர்பானவை என்றும் அரசியல் நோக்கமற்றவை என்றும் சீனா அந்தப் புகாருக்கு மறுப்புத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்