தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் அமைதி தொடர பேச்சுவார்த்தை

2 mins read
6eae8cdc-c5cc-4f2e-9989-e70ae2803bfd
இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை அதன் சிறையில் இருந்து விடுவித்து வருகிறது. - படம்: இபிஏ

டெல் அவிவ்: காஸாவில் அடுத்தகட்ட போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை (பிப்ரவரி 3) முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப்புடனான சந்திப்பிற்குப் பிறகு அந்த நடவடிக்கையை நெட்டன்யாகு தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) இஸ்ரேலில் இருந்து வா‌ஷிங்டன் சென்றார். மேலும் சில நாள்களில் அவர் திரு டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பேசுவுள்ளார்.

இரு தலைவர்களும் காஸா மற்றும் இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் குறித்து பேசலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திரு விட்காஃப்புடன் போர் நிறுத்த நடவடிக்கையில் இஸ்ரேலின் நிலைமை குறித்து நெட்டன்யாகு விளக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

நெட்டன்யாகுவுடன் பேசிய பிறகு திரு விட்காஃப், எகிப்து மற்றும் கத்தார் அதிகாரிகளுடன் பேசுவுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த எகிப்து, கத்தார் முக்கிய பங்கு வகித்தன.

கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து காஸாவில் மூன்று கட்டமாக போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக 18 பிணைக் கைதிகளை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. அதேபோல் இஸ்ரேலும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை அதன் சிறையில் இருந்து விடுவித்தது.

தற்போது ஹமாஸ் கட்டுப்பாட்டில் 70க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் காஸாவில் உள்ளனர். அவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட போர் நிறுத்தங்களில் விடுதலை செய்யப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்போர்