தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படங்களுக்கும் வரி; பாடாய்ப்படுத்தும் டிரம்ப்

1 mins read
b0077f2a-eaf2-4cf2-8c81-258783a54fa7
‘ஹாலிவுட்’ அமெரிக்காவின் பொருளியலுக்கு பலம் சேர்க்கும் துறையாகப் பார்க்கப்படுகிறது. - படம்: அன்ஸ்பிலா‌ஷ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வரி விதிப்பு தொடர்பாகப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் திரைத்துறையை மற்றவர்கள் திருடுகிறார்கள் என்றும் திரு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருந்துப் பொருள்கள், மரச்சாமான்கள், கனரக வாகனங்கள் என அடுத்தடுத்து வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரி விதித்து வந்த அதிபர் டிரம்ப்பின் பார்வை தற்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளது.

“அமெரிக்கத் திரைத்துறையில் உள்ள வர்த்தகத்தை “குழந்தையின் கையில் இருக்கும் மிட்டாயைத் திருடுவது போல் பலர் திருடுகின்றனர்,” என்று திரு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

மேலும் கலிஃபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கேவின் நியூசாமை கடுமையாகச் சாடியுள்ளார் டிரம்ப். “பலவீனமான, திறமையற்றவர் கேவின், அவரால் கலிஃபோர்னியா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு எப்போதிலிருந்து வரி அமல்படுத்தப்படலாம் என்பது குறித்த முழு விவரங்களைத் திரு டிரம்ப் வெளியிடவில்லை.

‘ஹாலிவுட்’ அமெரிக்காவின் பொருளியலுக்கு பலம் சேர்க்கும் துறையாகப் பார்க்கப்படுகிறது. அங்கு 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் திரைத்துறையில் வேலை செய்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டு மட்டும் ஹாலிவுட் படங்களால் 359 பில்லியன் டாலர் வர்த்தகம் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்