வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஆசிரியர் எடுத்த வித்தியாசமான முடிவு

வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஆசிரியர் எடுத்த வித்தியாசமான முடிவு

1 mins read
fb443d06-1e9c-4c74-846a-ba7f4beef4ff
படம்: JOEL CASUNGCAD/FACEBOOK -

பிலிப்பீன்ஸில் பள்ளி அறைகளில் வெப்பம் அதிகமாக இருந்ததால் மாணவர்களுக்கு வெளிப்புறங்களில் நிழல் உள்ள இடங்களில் தேர்வை நடத்தி அசத்தியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.

மாணவர்கள் வெப்பத்தால் தடுமாறக்கூடாது, அதே நேரம் தேர்வின்போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

ஜோயல் எனப்படும் அந்த ஆசிரியர் வெப்பத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு அந்நாட்டில் வேகமாகப் பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெளிப்புறங்களில் அமர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதும் போது அவர்களுக்கு மரம், செடிகளில் இருந்து கிடைக்கும் இயற்கையான காற்று அவர்களை வெப்பத்தில் இருந்து காப்பாற்றியதாக அவர் கூறினார்.

ஆசிய நாடுகளில் அண்மை நாள்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்