உரிமையாளரின் தம்பியைக் கடித்துக் குதறிக் கொன்ற நாய்கள்

1 mins read
e5fa47d7-d88b-4f6a-a9ab-dbf01453db15
சிறுவனைக் கடித்துக் கொன்ற பினோ, டெஸ்லா என்று அழைக்கப்படும் அந்த இரு நாய்களும் மாண்ட சிறுவனின் அண்ணனுக்குச் சொந்தமானவை. - படம்: WATCHDOG FOUNDATION THAILAND/ஃபேஸ்புக்

பேங்காக்: தாய்லாந்தின் லோப்புரி மாவட்டத்தில் 18 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் குதறிக் கொன்றன.

ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று 18 வயது அடிசாக் சன்சாகுன்னி தமது வீட்டின் தரைத்தளத்தில் மாண்டு கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்து ஏறத்தாழ 12 மணி நேரம் கழித்து அவரது உடலைக் காவல்துறை கண்டெடுத்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

சிறுவனைக் கடித்துக் கொன்ற பினோ, டெஸ்லா என்று அழைக்கப்படும் அந்த இரு நாய்களும் மாண்ட சிறுவனின் அண்ணனுக்குச் சொந்தமானவை. சிறுவனின் அண்ணன் ஒரு காவல்துறை அதிகாரி.

தமது தாயாரைப் பார்த்துக்கொள்ள அவர் லோப்புரியில் உள்ள வீட்டுக்குச் சம்பவம் நிகழ்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தமது நாய்களுடன் சென்றதாக அறியப்படுகிறது.

அந்த இரு நாய்கரும் அடிசாக்கைத் தாக்கியபோது அவற்றின் தாயான ‘டேங்க் கேஸ்’ அ்வனைத் தற்காக்க முயன்றதாகவும் அதன் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

டேங்க் கேஸை அடிசாக்கின் தந்தை வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டேங்க் கேசையும் சிறுவனைக் கொன்ற இரு நாய்களையும் பாதிக்கப்பட்ட குடும்பம் தத்தெடுப்புக்கு விட திட்டமிட்டுள்ளது

இது மிகவும் அபாயகரமானது என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

சிறுவனின் மரணத்துக்குக் காரணமான நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்