தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளத்தால் திரெங்கானுவில் பாதிப்பு

1 mins read
81bf316b-1580-4d99-931c-4429566a902b
வெள்ளம் நிரம்பிய சாலையைக் கடக்க முயலும் குடியிருப்பாளர்கள். - படம்: மலேசிய ஊடகம்

கோலா திரெங்கானு: மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் உள்ள கோலா நெருஸ் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், அங்கு தற்காலிக மீட்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவாக்கில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் அந்நிலையத்திற்கு இடமாற்றப்பட்டதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழு கூறியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இன்னும் மழை பெய்துகொண்டிருப்பதால் மேலும் அதிகமான நிலையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெள்ளம் காரணமாக கோலா திரெங்கானுவில் மூன்று பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திரெங்கானு மாநிலக் கல்வித் துறை துணை இயக்குநர் அஸ்மான் ஒத்மான் கூறினார்.

பள்ளிக்குச் செல்லவேண்டாம் என்று மாணவர்களிடம் கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து கற்கும் முறையைப் பின்பற்றுமாறு அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்