ரோபோ டாக்சிகளை வெளியிடும் டெஸ்லா

1 mins read
08c6caf9-9ee5-4bb5-a5bb-41e815b8844e
டெஸ்லா ரோபோ டாக்சிகள் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முதல் ரோபோ டாக்சி சேவையை வழங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் காலடி எடுத்துவைக்கும் வளர்ச்சிக்கான அடுத்த அத்தியாயத்தில் இந்நடவடிக்கை முதற்கட்டம் என்று அவரின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

திரு மஸ்க், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கத்தில் சிறிது காலம் அங்கம் வகித்தார். அதற்குப் பிறகு அவர் மீண்டும் தனது வர்த்தகங்களில் கவனம் செலுத்தும் வேளையில் ரோபோ டாக்சி குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.

தனது ‘வை’ (Y) ரக கார்களை டெஸ்லா, ரோபோ டாக்சிகளாக வெளியிடவுள்ளது. அந்நிறுவனத்தின் ‘சைபர்கேப்’ (Cybercab) ரக கார் ரோபோ டாக்சியாக வெளியிடப்படும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த கார் இன்னும் உற்பத்தியாகி வருகிறது.

டெஸ்லா, ரோபோ டாக்சிகளை வெளியிடும் என்று நீண்டகாலாக எதிர்பார்க்கப்பட்டது. இம்மாதம் திரு மஸ்க்குக்கும் திரு டிரம்ப்புக்கும் இடையிலான உறவு மோசமடைந்ததைத் தொடர்ந்து ரோபோ டாக்சி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

தங்களுக்கிடையிலான உறவு மோசமடைந்ததையடுத்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசும் வகையில் கருத்து வெளியிட்டனர். ஆனால், தான் வெளியிட்ட சில கருத்துகளுக்கு வருந்துவதாக திரு மஸ்க பின்னர் வெளிப்படையாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்