தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெக்சஸ் வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு

1 mins read
f38cf3dc-51ae-4d04-be7d-d2d99487dc5d
வெள்ளம் காரணமாக டெக்சஸ் மாநிலத்தில் உயிர்ச் சேதத்துடன் பொருள் சேதமும் ஏற்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ஆஸ்டின்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் மத்தியப் பகுதியைப் புரட்டி எடுத்த திடீர் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறைந்தது 43 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 15 சிறுவர்களும் அடங்குவர்.

வெள்ளத்தில் மாயமானோரைத் தேடும் பணிகள் தொடர்வதாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 6) அதிகாரிகள் கூறினர்.

மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

டிராவிஸ் கவுன்டி பகுதியில் வெள்ளம் காரணமாக நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது; 13 பேரைக் காணவில்லை.

மாண்டோர் எண்ணிக்கை 52ஆகப் பதிவானதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

ஆனால், இந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

850க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அவர்களில் சிலர் மரங்களில் ஏறி தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாயமானவர்களில் முகாம் ஒன்றில் முகாமிட்ட 27 சிறுமிகளும் அடங்குவர்.

முன்னுரைக்கப்பட்டதைவிட கனமழை பெய்ததால் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது என்று அதிகாரிகள் கூறினர்.

வெள்ளம் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்