தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டிற்குள் நுழைந்த புதிய உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற பழைய உரிமையாளர்

1 mins read
9ce328fd-9623-40de-b240-581f68ae03e6
படம்: தாய்லாந்து காவல்துறை -

தாய்லாந்தில் புதிய வீட்டிற்குள் நுழைந்த உரிமையாளர் ஒருவரை அவ்வீட்டின் பழைய உரிமையாளர் சுட்டுக்கொன்றார்.

வீட்டின் பழைய உரிமையாளரான 66 வயது டேச்சா என்பவரை வீட்டை விட்டு வெளியேறச் சென்னார் புது உரிமையாளரான 52 வயது கமோல்போர்ன்.

ஆனால், அதனைக் கேட்கமறுத்த டேச்சா, அப்பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்

கொலைச் சம்பவம் பத்தும்தானி மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 30) நடந்தது. கொலை நடந்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் டேச்சா காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

டேச்சா கடனை சரியாகக் கட்டாததால் வங்கி அவரின் வீட்டை விற்றுள்ளது.

வங்கியிடம் இருந்து வாங்கிய வீட்டைப் பார்க்க வந்த கமோல்போர்ன், டேச்சாவை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார், கோபமடைந்த டேச்சா அப்பெண்ணைக் கொலை செய்தார்.

கொலை செய்துவிட்டு வீட்டிற்குள் சென்ற டேச்சாவைக் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். டேச்சாவின் பிள்ளைகள் வந்து சமாதானம் செய்ய, கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பின் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

டேச்சாமீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்