பேங்காக்: தாய்லாந்து நாடாளுமன்றம் புதிய பிரதமருக்கான வாக்களிப்பு அடுத்த வாரம் மீண்டும் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறும் என்று நாடாளுமன்றத் துணை நாயகர் பிச்செட் சுவாமுவாங்ஃபான், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
திரு பிட்டாவின் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி’ கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்றது.
இருப்பினும், அடுத்த அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான திரு பிட்டாவின் பிரசாரம், ராணுவத்தால் நியமிக்கப்பட்ட செனட்டர்களால் நிராகரிக்கப்பட்டது. மன்னராட்சியின் கடுமையான அவதூறுச் சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவர திரு பிட்டா உறுதிகூறியிருந்தார். அது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று செனட்டர்கள் கூறி வருகின்றனர்.
வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற, திரு பிட்டாவுக்கு 375 இடங்கள் தேவைப்பட்டன. ஆனால் 51 இடங்கள் குறைவாகப் பெற்றதால் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறிவிட்டார்.