தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தாய்லாந்து பள்ளிப் பேருந்தில் தீப்பிடித்து குறைந்தது 23 பேர் மரணம்

பேருந்து ஓட்டுநர் கைது

2 mins read
176f9c20-63d6-46fb-8468-a6ba9dd0e1d4
பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த மாணவர் ஒருவரின் உறவினர் (நடுவில்), சிறுமியின் கண்களை மூடிக்கொள்கிறார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து தலை[Ϟ]நகர் பேங்காக்கில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) மாணவர்களும் ஆசிரியர்களும் சென்ற பேருந்தில் தீப்பிடித்துக்கொண்ட சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். 

தங்களின் அன்புக்குரியவர்[Ϟ]களின் உடல்களை அடையாளம் காண குடும்பத்தார் புதன்கிழமை பேங்காக்கிற்குச் சென்ற நிலையில், பேருந்து ஓட்டு[Ϟ]நரைக் காவல்துறையினர் [Ϟ]கைது செய்தனர்.

பள்ளிச் சுற்றுலாவுக்காக பேங்காக்கிற்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தாய் தானி மாநிலத்திலிருந்து அயுத்தயா, நொந்தாபுரி மாநிலங்களுக்குச் சென்ற அப்பேருந்தில் ஆறு ஆசிரியர்[Ϟ]களும் பாலர் பள்ளி மாணவர்கள் முதல் 13, 14 வயது வரையுள்ள 39 மாணவர்களும் இருந்தனர்.

நெடுஞ்சாலையில் சென்றபோது பேருந்தின் சக்கரங்[Ϟ]களில் ஒன்று வெடித்ததால் சாலைத்தடுப்பில் பேருந்து [Ϟ]மோதி தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவியதால் பலராலும் வெளியேற முடியவில்லை.

இந்நிலையில், தீவிபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் இரு துணைப் பிரதமர்களும் உள்துறை துணை அமைச்சரும் அடங்குவர்.

இச்சம்பவம் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் பேடோங்டார்ன், “ஒரு தாயாராக, இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்[Ϟ]களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமுற்றோரின் மருத்துவச் செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவளிக்கப்படும்,” என்றார்.

இச்சம்பவம் குறித்து செய்தி[Ϟ]யாளர்கள் கேட்க முற்பட்டபோது, பிரதமர் பேடோங்டார்ன் எதுவும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்துக்குள் அவர் நுழைந்தார்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன், பிரதமர் பேடோங்டார்ன் அழுததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. அத்தகைய ஒரு சம்பவத்தில் சிறு வயதில் உள்ள பிள்ளை[Ϟ]களால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இயலாமல் போனதை எண்ணி அவர் மிகுந்த வேதனைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்