அருகிவரும் கழுகை வளர்க்கும் தாய்லந்து விலங்குத் தோட்டம்

அருகிவரும் கழுகை வளர்க்கும் தாய்லந்து விலங்குத் தோட்டம்

1 mins read
003ed87b-7b88-4205-b52f-01bb1a0b671b
படம்: ராய்ட்டர்ஸ் -

'ரெட்-ஹெட் வல்சர்' எனும் இந்த அரியவகை கழுகு தாய்லாந்தின் நாக்கோன் சட்சசிமா விலங்குத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக ஆசியாவில் இக்கழுகு வளர்க்கப்படுகிறது.

இதைப் போல் வேடம் பூண்டு உணவு ஊட்டி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் இயற்கைப் பாதுகாப்பாளர்கள். இதன் பெற்றோர் எப்படி இருந்திருப்பர் என்ற உணர்வை இதற்குத் தந்து பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பாளர்களின் இலக்கு.

முயல், மான், கோழி, எலி போன்ற விலங்குகள் இதற்கு இறையாக வழங்கப்படும். உணவு உட்கொண்ட பிறகு இந்தக் கழுகு வைட்டமின் டி ஊட்டச்சத்தைப் பெற சூரிய ஒளியில் இளைப்பாறும்.

குறிப்புச் சொற்கள்