பேங்காக்: நெகிழிக் கழிகளைத் தாய்லாந்துக்குள் கொண்டு வருவது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலைகளில் அவற்றைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும்.
சுற்றுப்புறத்தையும், பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தாய்லாந்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை டிசம்பர் 17ஆம் தேதியன்று அறிவித்தது.
இந்தப் பரிந்துரையைத் தாய்லாந்தின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற அமைச்சு முன்வைத்தது.
பரிந்துரையை தாய்லாந்து அமைச்சரவை டிசம்பர் 3ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டது.
நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்துள்ள தாய்லாந்து நிறுவனங்களை அவற்றை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் தாய்லாந்துக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

