கம்போடியா எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் தாய்லாந்து

கம்போடியா எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் தாய்லாந்து

1 mins read
f5908efa-2438-4ac8-a8b1-f7ebd8e7acdb
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. அதையடுத்து தற்போது வேலிகள் அமைக்கும் நடவடிக்கையில் தாய்லாந்து இறங்கியுள்ளது.  - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்து, கம்போடியாவுடனான எல்லையில் தடுப்பு வேலிகளை அமைக்கத் தொடங்கியுள்ளது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. அதையடுத்து தற்போது வேலிகள் அமைக்கும் நடவடிக்கையில் தாய்லாந்து இறங்கியுள்ளது.

முதல் நடவடிக்கையாக நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சந்தாபுரி மாநிலத்தின் எல்லையில் 1.31 கிலோமீட்டருக்குத் தடுப்பு வேலியைப் போடுகிறது தாய்லாந்து.

அதை தாய்லாந்து ராணுவத்தின் பேச்சாளரும் உறுதிசெய்துள்ளார். 45 நாள்களில் வேலி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் 800 கிலோமீட்டர் எல்லைத் தூரத்தைப் பகிர்ந்துகொள்கின்றன.

குறிப்புச் சொற்கள்