தாய்லாந்து-கம்போடியப் பதற்றம்: தலைவர்களுடன் பேசப்போவதாகக் கூறும் டிரம்ப்

1 mins read
f17a02d5-5635-45ec-8b92-8937cf49b3ea
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் அண்மையில் மீண்டும் தலைதூக்கிய சண்டையால் பல்லாயிரம் பேர் தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: தாய்லாந்து, கம்போடியத் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இரு நாட்டுக்கும் இடையில் மீண்டும் மோதல் தலைதூக்கியிருக்கும் நிலையில், திரு டிரம்ப் அவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் உலக அளவில் வரிகள் மூலம் மிரட்டல் விடுத்து நிறுத்தியதாகக் கூறும் எட்டுப் பூசல்களில் தாய்லாந்து-கம்போடியாவும் ஒன்று. தமது நிர்வாகம், ‘வலிமையின் மூலம் அமைதி’ எனும் கொள்கையைப் பின்பற்றுவதாக அவர் சொன்னார்.

“தொலைபேசியில் இருநாட்டுத் தலைவர்களுடனும் நான் பேசப்போகிறேன். தொலைபேசியில் அழைத்துப் பேசுவதன் மூலம் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த முடியும் என்று யாரால் சொல்லமுடியும்?” என அவர் வினவினார்.

இந்நிலையில் தாய்லாந்து, எல்லைப் பூசல் குறித்த சமரசப் பேச்சுகளுக்குச் சாத்தியம் இருக்காது என்று கூறியுள்ளது. மூன்றாம் தரப்பு, சமரசம் பேசுவதற்குச் சூழல் சாதகமாக இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

கம்போடியா எந்த நேரத்திலும் பேச்சு நடத்தத் தயாராய் இருப்பதாகப் பிரதமர் ஹுன் மானெட்டின் உயர் ஆலோசகர் கூறினார்.

இந்நிலையில், தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் விமானங்கள், பீரங்கி வாகனங்கள், ஆளில்லா வானூர்திகள் முதலியவற்றைச் சண்டையிட்ட பகுதிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றினர்.

பகோடாக்கள், பள்ளிகள் போன்ற பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அண்மைச் சண்டையில் 11 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்