கம்போடியாவுடன் அமைதிப் பேச்சில் பங்கேற்கவுள்ள தாய்லாந்துத் தற்காப்பு அமைச்சர்

1 mins read
83ec1b20-7026-4e00-a58f-db5cd42fb788
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குன் - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குன், கம்போடியாவுடனான அமைதிப் பேச்சில் தமது நாட்டின் தற்காப்பு அமைச்சர் பக்கேற்பார் என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) கூறியிருக்கிறார்.

இரு நாட்டுக்கும் இடையில் மூன்று வாரமாக மோதல் தொடரும் நிலையில், அமைதிப் பேச்சு நடைபெறுகிறது. அதில் சனிக்கிழமை தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இரு நாட்டுத் தற்காப்பு அமைச்சர்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டால் உடன்பாடு எட்டப்படும் என்றார் திரு அனுட்டின்.

“இரு தரப்பும் ஒன்று மற்றொன்றை அச்சுறுத்தாது, எதிர்க்காது, தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடாது எனும் உத்தரவாதங்களைக் கட்டிக்காப்பது முக்கியம். இரு நாட்டுக்கும் இடையில் நிலவும் பகைமைப் போக்கைக் குறைப்பதும் அவசியம்,” என்று அவர் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன் தொடர்பில் கம்போடியத் தற்காப்பு அமைச்சு கருத்துக் கூற மறுத்துவிட்டது.

சண்டைநிறுத்தம் இம்மாதத் தொடக்கத்தில் முறிந்தது. அதன் பின்னர் நடந்த மோதல்களில் இரு தரப்பிலும் 98 பேர் மாண்டனர். அரை மில்லியனுக்கும் அதிகமானோர் இடம் மாற நேரிட்டது.

குறிப்புச் சொற்கள்