பேங்காக்: தாய்லாந்தில் இயங்கி வரும் சட்டவிரோதமான சுற்றுலாச் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்பாக பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தாய்லாந்து சுற்றுப்பயணத் துறையின் நிரந்தர செயலாளர் நட்ரீயா தவீவோங் அறிவித்திருக்கிறார். இந்தப் பணிக்குழுவில் ஐந்து அமைப்புகள் இணைந்திருப்பதாகத் திருவாட்டி நட்ரீயா தெரிவித்தார்.
இருந்தபோதும், சுற்றுப்பயணிகள் கடத்தப்படுவதாகக் கூறும் வதந்திகளைத் திருவாட்டி நட்ரீயா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“சுற்றுப்பயணிகள் கடத்தப்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நம் நாட்டிற்கு வரும் பயணிகள் அனைவரின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்வதில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
நியாயமற்ற விலைவிதிப்புகளும் சேவைக் கட்டணங்களும் குறித்து தனது அமைச்சு, தரத்தையும் நேர்மையையும் உறுதிசெய்யும் படிநிலை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக திருவாட்டி நட்ரீயா கூறினார்.
அத்துடன், நாட்டின் சேவைகளைப் பயணிகள் எளிதில் பயன்படுத்தவும் சில முடிவுகளை அமைச்சு எடுத்துள்ளது.
கட்டண விலைகளைக் குறைப்பதற்கு விமான எரிபொருளுக்கான வரிகளைக் குறைப்பதும் உள்நாட்டு விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவுகளும் இதில் அடங்கும்.
பயணிகள் தங்கள் பொருள்களைத் தொலைத்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விமான நிலையச் சேவை ஒன்றும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், தாய்லாந்திற்குள் சீராக நுழைவதற்கான குடிநுழைவு முறைகளுக்கு காவல்துறையின் ஆதரவும் உள்ளது