தாய்லாந்தில் ஜூலை 31 பொது விடுமுறை

தாய்லாந்தில் ஜூலை 31 பொது விடுமுறை

1 mins read
9711f38d-d355-47b6-9c9f-4439a4f6d267
தொடர் விடுமுறை உள்நாட்டுப் பயணங்களையும் செலவீனங்களையும் ஊக்குவிக்கும் என்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் என்றும் திருவாட்டி ரச்சாடா தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து அமைச்சரவை ஜூலை 31 ஆம் தேதியைப் பொது விடுமுறை நாளாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுலா, தனியார் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பதாக அது தெரிவித்தது.

இதன்மூலம் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆறுநாள் தொடர் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான பொது, தனியார் நிறுவனங்கள் தொடர் விடுமுறை நாள்களான ஜூலை 28ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்றும் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளரான ரச்சாடா தனாதிரேக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், வழக்கமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் தொடர்விடுமுறைக் காலங்களில் ஒத்திவைக்கப்படும் என்றும் ஜூலை 31ஆம் தேதியை வங்கி, தொழிலாளர் விடுமுறை நாளாக அறிவிக்க ‘பேங்க் ஆஃப் தாய்லாந்து’, தொழிலாளர் அமைச்சைப் பரீசிலிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர் விடுமுறை உள்நாட்டுப் பயணங்களையும் செலவீனங்களையும் ஊக்குவிக்கும் என்றும் அது சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என்றும் திருவாட்டி ரச்சாடா தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தடையின்றித் தொடர் விடுமுறைக் காலங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்