பேங்காக்: மியன்மார் தொடர்பாக இவ்வாரம் இரு வட்டாரக் கூட்டங்களை ஏற்று நடத்த இருப்பதாக திங்கட்கிழமை (டிசம்பர் 16) தாய்லாந்து தெரிவித்தது.
குறைந்தது ஒரு கூட்டத்தில் மியன்மாரை ஆட்சி செய்யும் ராணுவத்தின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
மியன்மார் மீண்டும் ஆசியான் நாடுகளுடன் இணைந்து செயல்படத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிசம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இரண்டு வெவ்வேறு கலந்துரையாடல்களுக்குத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சாங்கியாம்போங்சா தலைமை தாங்குவார்.
டிசம்பர் 19ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் மியன்மாரின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு, எல்லை கடந்த குற்றச் செயல்கள் ஆகியவை தொடர்பாக அதிகாரபூர்வக் கலந்துரையாடல் நடைபெறும் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கூறியது.
மியன்மாருடன் எல்லைகளைப் பகிரும் சீனா, இந்தியா, பங்ளாதேஷ், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொள்வர்.
டிசம்பர் 20ல் நடைபெறும் கூட்டத்தில் மியன்மார் கலந்துகொள்ளுமா என்பது இன்னும் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தனது வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்வார் என்று இந்தோனீசியா தெரிவித்துள்ளது.