தாய்லாந்து மதுக்கூடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 33 ஆனது

தாய்லாந்து மதுக்கூடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 33 ஆனது

1 mins read
21e093b7-aa8e-4206-b9a6-be119c10d890
தீக்கிரையான தாய்லாந்தின் மதுக்கூடம். 20 ஆண்டுகளில் அந்நாட்டில் நடந்த மிக மோசமான தீச் சம்பவம் இதுவாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: இவ்வாரம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடந்த தீ விபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 33 என்றானது.

அவ்விபத்தில் மரணமடைந்தோரில் அன்றைய தினம் மதுக்கூடத்தில் இசை நிகழ்ச்சி வழங்கிய ‘டொசாகான்’ இசைக்குழுவின் நான்கு இசைக் கலைஞர்களும் அடங்குவர். அக்குழுவில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இருந்தனர்.

அந்த இசைக் குழுவுக்கு நேர்ந்த துயரம் தாய்லாந்து மக்களை பெரிதும் பாதித்துள்ளது. தலைநகரின் மக்கள் அவர்களது சோகத்தையும் குழப்பத்தையும் வெளிப்படுத்திய அதே வேளையில் மரணத்திற்கும் காயமும் அடைந்தோருக்கும் இழப்பீடு வழங்கும்படி அவர்களில் பலர் புதன்கிழமை (ஜூலை 15) கோரிக்கை வைத்துள்ளனர்.

உயிரிழந்தோரில் ஒருவரான இசைக்குழுவில் கீபோர்ட் கருவியை வாசித்த பிரியுதிபொங் பட்மொன் என்ற கலைஞரின் சகோதரியான சன்யனக் பட்மொன், மறைந்தவரைப் பற்றிய சில கருத்துகளை முன்வைத்தார்.

“நான் அவரது பிரதிநிதியாக இருந்தால், யாரும் கவலையுற்று அழவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொள்வார் என்று எண்ணுகிறேன். அவர் தற்போது இருக்கும் நிலையை யாரும் பார்க்கவேண்டாம் என்றுதான் அவர் விரும்புவார். ஆயினும், மேடையில் அவர் மகிழ்ந்து வழங்கிய இசையையும் அவரது புன்னகையையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அக்கலைஞரின் சகோதரியும் குடும்பத்தினரும் அவரது நல்லுடலை பேங்காக்கின் தடய அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து எடுத்துச் சென்றபோது அவ்வாறு கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்