எல்லைக் கோயில்கள்: கம்போடியாவின் சீற்றத்தைத் தூண்டிய தாய்லாந்தின் செயல்

எல்லைக் கோயில்கள்: கம்போடியாவின் சீற்றத்தைத் தூண்டிய தாய்லாந்தின் செயல்

1 mins read
f1578914-6caa-4311-a230-1b6c83a761e9
கம்போடியாவுடனான தனது சர்ச்சைக்குரிய எல்லையில், பண்டைய கோயில் இடிபாடுகள் இருந்த இடத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பௌத்தச் சடங்கு ஒன்றை தாய்லாந்து நடத்தியது. - படம்: ஏஎஃப்பி/தாய்லாந்து தற்காப்பு அமைச்சு

நோம்பென்: சர்ச்சைக்குரிய எல்லைக் கோயில்களை தாய்லாந்து தனது தொல்லியல் நினைவுச் சின்னப் பதிவேட்டில் இணைத்த செயல் அண்டைய கம்போடியாவின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த ஆண்டு பல உயிர்களைப் பலிவாங்கிய தாய்லாந்து-கம்போடிய எல்லை மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பல கோயில் இடிபாடுகளை அந்தப் பதிவேட்டில் இடம்பெறச் செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லையில் அமைந்துள்ள தமோன், டா கிராபே மற்றும் க’னார் ஆகிய கோவில்களையும் பிற தொல்லியல் தளங்களையும் தாய்லாந்து சட்டவிரோதமாகப் பதிவு செய்திருப்பதைத் திரும்பப் பெறுமாறு கம்போடியாவின் கலாசார அமைச்சு புதன்கிழமை (மே 13) வலியுறுத்தியது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்தும் கம்போடியாவும் 800 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு குறித்த வரையறையில் முரண்பாட்டைக் கடைப்பிடிக்கின்றன.

பிரெஞ்சு காலனித்துவக் காலத்தின் எஞ்சிய பகுதிகளாகத் திகழும், பல நூற்றாண்டுகள் பழமையான சில கோயில் தளங்களுக்காக அவ்வப்போது மோதி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக 2025 ஜூலை முதல் டிசம்பர் வரை நடைபெற்ற மோதல்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது, இருதரப்பிலும் உரிமை கொண்டாடப்பட்ட சில கோயில்கள் தாய்லாந்து கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.

குறிப்புச் சொற்கள்