தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
a8032833-f2e8-4486-a08d-4bab5b18dc35
மவுன்ட் லெவொடோபி லாகி-லாகியிலிருந்து வெளியாகும் புகை. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து, 2,000த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்திலுள்ள மவுன்ட் லெவொடோபி லாகி-லாகி என்ற அந்த எரிமலை அண்மைய வாரங்களில் பலமுறை குமுறியது.

புத்தாண்டு நாளன்று ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு அது சாம்பலைக் கக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் 2ஆம் தேதியும் அது குமுறியதாகப் பதிவானது.

லெவொடோபி எரிமலை வெடிப்பால் ஃபிரான் சேடா விமான நிலையம் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது. அவ்விமான நிலையம், எரிமலையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த டிசம்பரில் சுமத்ரா தீவிலுள்ள மவுன்ட் மெராப்பி எரிமலை வெடிப்பால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தோனீசியாவில் கிட்டத்தட்ட 130 எரிமலைகள் உயிர்ப்புடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்