தென்கொரியாவில் நாய்களைத் துப்பாக்கியால் சுட்ட மூவருக்குச் சிறை

தென்கொரியாவில் நாய்களைத் துப்பாக்கியால் சுட்ட மூவருக்குச் சிறை

படம்: தென்கொரிய நீதிமன்றங்கள்

04 Nov 2026 - 4:56 pm

1 mins read

சோல்: தென்கொரியாவில் செல்லப் பிராணிகளாக இருந்த இரு நாய்களை, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ‘பிபி’ வகை துப்பாக்கிகளால் பலமுறை சுட்ட ஆடவர்கள் மூவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவம் தென் கியோங்சாங் மாநிலத்தில் உள்ள கியோஜே நகரில் நிகழ்ந்தது. தாக்கப்பட்ட நாய்களில் ஒன்று உயிரிழந்தது. மற்றொன்றுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண்ணை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

குற்றவாளிகளான மூவரும் 20 வயதைத் தாண்டியவர்கள் ஆவர். அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த, சம்பந்தப்பட்ட இடங்களில் மோசமான சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. சம்பவம் சென்ற ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி ஒரு உணவகத்துக்கு வெளியே நிகழ்ந்தது.

பலமுறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, நாய்கள் அனுபவித்த வேதனை ஆகியவை கருத்தில்கொள்ளப்பட்டதாக பூசான் மாவட்ட நீதிமன்றத்தின் கிழக்குப் பகுதிக் கிளை தீரப்புகளை விவரிக்கும்போது தெரிவித்தது. தாக்கப்பட்ட நாய்களில் ஒன்று பல மாத சிகிச்சைக்குப் பிறகு மாண்டது.

நாய்களின் உரிமையாளர்களுடன் சமரசம் செய்துகொள்ள அவகாசம் அளிக்க நீதிமன்றம், அந்த மூவரைத் தடுப்புக் காவலில் வைக்கவில்லை. ஆனால், சமரசத்துக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று நாய்களின் உரிமையாளர்கள் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்