தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்ட சீனக் குழு

1 mins read
c46864ea-fc38-4ab9-aa05-2915211a6c05
தியேன்கோங் விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்ட சீன விண்வெளியாளர்களில் 34 வயது பெண்ணான லெஃப்டினெண்ட்-கர்னல் வாங் ஹாவ்சியும் ஒருவர் (இடது). - படம்: ஏஎஃப்பி

ஜிகுவான்: தியேன்கோங் விண்வெளி நிலையத்துக்குச் சீனாவின் மூன்று பேரைக் கொண்ட விண்வெளியாளர் குழு அக்டோபர் 30ஆம் தேதி அதிகாலை புறப்பட்டுச் சென்றது.

2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளியாளர்களை அனுப்பிவைத்து அங்கு ஒரு தளத்தை அமைக்க சீனா இலக்கு கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு நடத்த இந்த மூன்று பேரும் விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள செயற்கைக் கோள் பாய்ச்சும் நிலையத்திலிருந்து ஷென்சோ-19 விண்கலம் மூலம் அந்த மூன்று விண்வெளியாளர்களும் புறப்பட்டதாகச் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.

அந்த மூன்று விண்வெளியாளர்களில் சீனாவின் ஒரே ஒரு பெண் விண்வெளிப் பொறியாளரான 34 வயது லெஃப்டினெண்ட் - கர்னல் வாங் ஹாவ்சியும் ஒருவர்.

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட மூன்றாவது சீனப் பெண் எனும் பெருமை இவரைச் சேரும்.

குறிப்புச் சொற்கள்