தைப்பேயில் கத்தி ஏந்திய ஆடவர் தாக்கியதில் மூவர் மரணம்

1 mins read
காவல்துறை துரத்தியதில் கட்டடத்திலிருந்து விழுந்து சந்தேக நபர் மரணம்
3a2f0710-3213-4ca2-8b39-59d2a2ef9e57
ஸோங்ஷான் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

தைப்பே: தைவான் தலைநகர் தைப்பேயின் மத்திய பகுதியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) கத்தி ஏந்திய ஆடவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதில் மூவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமுற்றனர்.

பின்னர், காவல்துறையினர் துரத்தியதில் அந்த ஆடவர் கட்டடம் ஒன்றிலிருந்து விழுந்து உயிரிழந்ததாக தைவானியப் பிரதமர் சோ ஜுங் தாய் தெரிவித்தார்.

தைப்பேயின் பிரதான ரயில் நிலையத்தில் அந்த ஆடவர் புகைக் குண்டுகளை வீசிவிட்டு, பரபரபான கடைத்தொகுதி வட்டாரத்தில் உள்ள நிலத்தடி ரயில் நிலையத்துக்கு விரைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாக பிரதமர் சோ கூறினார்.

இந்தச் சம்பவங்கள் இரண்டு நிலத்தடி ரயில் நிலையங்களான தைப்பே மெயின் நிலையத்திலும் ஸோங்ஷான் நிலையத்திலும் நிகழ்ந்ததாக அதிபர் லாய் சிங் டே தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவருக்கு ஏற்கெனவே குற்றப் பின்னணி இருந்ததாகவும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சோ சொன்னார்.

தைவானில் வன்முறைக் குற்றங்கள் நடப்பது அரிது.

அந்த ஆடவர் புகைக் குண்டுகளுடன் சேர்த்து, சம்பவ இடத்திலேயே எரிந்ததாக நம்பப்படும் பெட்ரோல் குண்டுகளை வைத்திருந்ததாகத் தெரிகிறது. மேலும், அவர் கவச உடையும் முகக்கவசமும் அணிந்திருந்ததாக பிரதமர் சோ கூறினார்.

“அவரது உள்நோக்கத்தைக் கண்டறிய அவரது பின்னணியையும் இதில் மற்றவர்கள் உடடான தொடர்பையும் நாங்கள் விசாரிப்போம்,” என்றார் பிரதமர் சோ.

குறிப்புச் சொற்கள்