தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியத் தலைநகரில் சனிக்கிழமை பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும்: காவல்துறை

1 mins read
9522e0c1-22a0-4efc-9306-d54caf3858e3
பேரணியில் பங்கெடுக்காதவர்களை மெர்டேக்கா சதுக்கத்தைத் தவிர்க்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகமது காலில் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார். - படம்: பெர்னாமா

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் மெர்டேக்கா சதுக்கத்தில் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறவிருக்கும் பேரணியின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். அதற்குத் தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்குக் காவல்துறையினர் ஆலோசனை கூறியுள்ளனர்.

காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகமது காலில் இஸ்மாயில் அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கான அரசமைப்பு உரிமையை மலேசிய அரசுக் காவல்துறை மதிப்பதாகச் சொன்னார்.

பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளவர்களை மெர்டேக்கா சதுக்க வட்டாரத்தைத் தவிர்க்குமாறு அல்லது முன்கூட்டியே அங்கு சென்றுவிடுமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை, போக்குவரத்தைச் சீராக வைத்திருக்க உதவும் என்றும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் நலனையும் நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க ஜனநாயகப் பொதுவெளியை ஆக்ககரமாகப் பயன்படுத்தும்படியும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலில் வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட அனைவரையும் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் பல்லாயிரம் பேர் கலந்துகொள்வர் என்று காவல்துறையினர் ஏற்கெனவே கூறியிருந்தனர். எதிர்த்தரப்பைச் சேர்ந்த பாஸ் (PAS) கட்சியின் தலைமையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்