தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகரும் நடைபாதை விபத்து;விமான நிலையத்தின் இயக்குநர் மாற்றம்

1 mins read
3d1db81a-4739-4b24-8e13-f11143dce387
 பேங்காக்கின் டோன் முயாங் விமான நிலையத்தின் இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட் இடமாற்றம் செய்யப்படுகிறார் எனத் தகவல் அறிந்த வட்டாரம் கூறியது. - படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

பேங்காக்: பேங்காக்கின் டோன் முயாங் விமான நிலையத்தின் இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட் இடமாற்றம் செய்யப்படுகிறார் எனத் தகவல் அறிந்த வட்டாரம் கூறியது.

ஜூன் மாதம், அந்த விமான நிலையத்தின் நகரும் நடைபாதையில் சிக்கி பெண் ஒருவர் தனது இடது காலின் ஒரு பகுதியை இழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தாய்லாந்து விமான நிலையக் குழுமம் நடத்தியது. அந்த விசாரணைக்குப் பிறகு திரு கருண் இடமாற்றம் செய்யப்படுகிறார்.

திரு கருண் தனகுல்ஜீரபட்டுக்கு பதிலாக திரு விஜித் கேசைத்தியம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது திரு விஜித், சியாங் மாய் அனைத்துலக விமான நிலையத்தின் இயக்குநராக உள்ளார். இந்த நியமனம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனச் சொல்லப்பட்டது.

திருகுகள் காணாமல் போனதால் நகரும் நடைபாதைத் தகடுகளில் ஒன்று அதன் சட்டகத்திலிருந்து நழுவியது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டது என விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த மூன்று திருகுகளையும் விசாரணை அதிகாரிகள் நகரும் நடைபாதைக்கு அடியில் இருந்து எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க டோன் முயாங் விமான நிலையத்திலுள்ள அனைத்து நடைபாதைகளையும் அது தொடர்புடைய உபகரணங்களின் நிலை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தாய்லாந்து விமான நிலையக் குழும இயக்குநர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்