தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து செல்ல மின்னிலக்க அட்டையை சிங்கப்பூரர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்

1 mins read
55ce7c1b-63c0-4bda-8717-ce1f3b87843a
தாய்லாந்துக்கு வருவோரும் தாய்லாந்தில் இருந்து புறப்படுவோரும் மின்னிலக்க வருகை அட்டையை இணையம் வாயிலாகப் பூர்த்தி செய்ய வேண்டும். - கோப்புப் படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்திற்குள் நுழைய சிங்கப்பூரர்கள் உட்பட வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (passport) வைத்திருக்கும் அனைவரும் மே 1ஆம் தேதி முதல் மின்னிலக்க வருகை அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தாய்லாந்து குடிநுழைவுத் துறை இதனை அறிவித்து உள்ளது.

TM6 படிவம் என்று அழைக்கப்படும் அந்த மின்னிலக்க வருகை அட்டையை, தாய்லாந்துக்கு கடல்வழி, வான்வழிப் பயணமாக வருவோரும் தாய்லாந்தில் இருந்து புறப்படுவோரும் இணையம் வாயிலாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

சிங்கப்பூர் போன்ற விசா விலக்கு பெற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் அது பொருந்தும்.

மின்னிலக்கப் படிவத்தைச் சமர்ப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை. தற்போது தாளில் உள்ள படிவம் மின்னிலக்கத்துக்கு மாறுகிறது; அவ்வளவுதான்.

மின்னிலக்க TM6 அட்டையில் பயணிகள் தங்களது சொந்த விவரங்களையும் பயணத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். கடவுச்சீட்டு விவரங்கள், தாய்லாந்தில் தங்கப்போகும் முகவரி போன்றவற்றையும் அதில் குறிப்பிட வேண்டும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

தாய்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்போர் மட்டும் மின்னிலக்க வருகை அட்டையைப் பூர்த்தி செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் அவை கூறின.

குறிப்புச் சொற்கள்