அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தை கலைத்த டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தை கலைத்த டிரம்ப் நிர்வாகம்

படம்: ராய்ட்டர்ஸ்

28 Apr 2026 - 4:45 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் கலைத்ததாக அக்கழகத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இரு உறுப்பினர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி தெரிவித்தனர்.

அக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அறிவியல் அறக்கட்டளையின் நிர்வாகத்தை வழிநடத்தவும் அறிவியல், பொறியியல் கொள்கைகள் குறித்து அதிபர், நாடாளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கவும் 1950ஆம் ஆண்டில் இந்தக் கழகம் நிறுவப்பட்டது.

ஆறு ஆண்டுகாலப் பதவிக்காக நியமிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை அது கொண்டிருந்தது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அதிபராகப் பதவியேற்றது முதல், திரு டிரம்ப் சுதந்திரமான செயல்படும் அமைப்புகளின்மீது அழுத்தம் கொடுத்து வருகிறார்.

தலைமைப் பொறுப்புகளில் விசுவாசிகளை நியமிப்பதன் மூலமும், சுதந்திரமான கருத்துகளையும் விமர்சனக் குரல்களையும் அகற்றுவதன் மூலமும் அந்த அமைப்புகளை மாற்றியமைக்க அவரது நிர்வாகம் முயற்சிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கழக உறுப்பினர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்அறிவியல் நிலையம்பணிநீக்கம்