சீனாவுக்குப் புதிய நெருக்கடி தரும் டிரம்ப் நிர்வாகம்

1 mins read
695c61e0-43db-48d4-8f77-6f98ac734cfe
உலகில் ஓர் ஆண்டில் தயாரிக்கப்படும் சரக்கு கப்பல்களில் 50 விழுக்காட்டுக்கு மேலான கப்பல்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: சீனாவுக்குச் சொந்தமான அல்லது சீனாவுக்குத் தொடர்புடைய கப்பல்கள் அமெரிக்காவின் துறைமுகத்தில் நிற்கும் போது அதனிடம் இருந்து கட்டணம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்படும் கப்பல்களுக்கும் அது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

தனது நட்பு நாடுகளையும் சீனாவின் கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் பேச்சைக் கேட்க மறுக்கும் நாடுகளுக்குப் பதிலடி தரப்படும் என்றும் கூறப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் கப்பல் தயாரிப்பு துறைக்கு உயிரூட்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அதேபோல் சீனாவின் கப்பல் துறைக்கு இது பேரிடியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அமெரிக்கா வரைவு ஒன்றை ஏற்பாடு செய்துவருகிறது.

உலகில் ஓர் ஆண்டில் தயாரிக்கப்படும் சரக்கு கப்பல்களில் 50 விழுக்காட்டுக்கு மேலான கப்பல்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.

1999ஆம் ஆண்டின் தரவுபடி உலகில் ஓர் ஆண்டில் தயாரிக்கப்படும் சரக்கு கப்பல்களில் வெறும் 5 விழுக்காடு கப்பல்கள் மட்டுமே சீனாவில் தயாரிக்கப்பட்டன. தற்போது அதை பலமடங்கு உயர்த்தியுள்ளது பெய்ஜிங்.

குறிப்புச் சொற்கள்