வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் திரு டோனல்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 50,000 பேர் அரசு ஊழியராகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தேசியப் பாதுகாப்பு, கொள்கை உள்ளிட்ட பிரிவுகளில் உள்ளவர்கள்.
“அரசாங்க வேலைகளில் சேர்க்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்க ஊழியர்கள்,” என்று அமெரிக்க அரசாங்கத்தின் மனிதவள இயக்குநர் ஸ்காட் கூபர் வியாழக்கிழமை (நவம்பர் 13) இரவு தெரிவித்தார்.
டிரம்ப் நிர்வாகம் தொடக்கம் முதலே அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்துறை வருவாய்த் துறை, சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்களைக் குறைத்த அரசாங்கம், குடிநுழைவுத் துறையில் புதிய வேலைகளை உருவாக்கியது.
இவ்வாண்டு மட்டும் கிட்டத்தட்ட 300,000 அரசாங்க ஊழியர்களை டிரம்ப் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டிருந்தது. இதுவரை 154,000 பேர் அரசாங்க ஊழியரணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

