வெஸ்ட் பால்ம் பீச்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் டிசம்பர் 29ஆம் தேதியன்று காலமானார். அவருக்கு 100 வயது.
திரு கார்ட்டரின் இறுதிச் சடங்கு ஜனவரி 9ஆம் தேதியன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராக இம்மாதம் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகத் திரு டிரம்ப் கூறினார்.